கீழக்கரை ஆக, 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்த பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் நேற்று நகர் தலைவர் ஜலில் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் நகர் தலைவர் நூருல் ஜமான், மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஸி கலந்து கொண்டு இனிவரும் காலங்களில் கீழக்கரை நகருக்கு தமிழக அரசு மற்றும் நகராட்சியிடம் இருந்து மக்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் போன்ற நலத்திட்டங்களில் கவனம் செலுத்தி மக்களுக்கு பெற்று கொடுத்திட களப்பணி ஆற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினர்.
தொகுதிதுணைத் தலைவர் (கீழக்கரை) தாஜுல் அமீன் அவர்களும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் (கீழக்கரை) பகுருதீன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.நகர் சார்பாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
SDPI கட்சியின் பெண்கள் பிரிவான WIM நிர்வாகிகளான மாவட்ட துணைத் தலைவர் முபினாஇஸ்மாயில் மற்றும் கீழக்கரை நகர் தலைவர் சுல்தான் பிவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நகர் தலைவர் ஜமீல் வரவேற்புரை நிகழ்த்தினார் இந்த செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.!
1) நகராட்சிக்குரிய அரசு அடிப்படை கட்டமைப்புகளான நூலகம்,விளையாட்டு மைதானம்,அரசு பள்ளிகள்,பூங்கா உள்ளிட்ட எதுவும் இல்லாததால் கீழக்கரை நகராட்சியை கிராம ஊராட்சியாக மாற்றுமாறு தமிழக அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
2) அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்தும் குறிப்பிட்ட காலத்தில் நேரம் தாழ்த்தாமல் மின் அளவீட்டினை எடுக்க தவறிய கீழக்கரை மின்சாரத் துறையை கண்டித்து பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஹாஜா அலாவுதீன் மற்றும் ஃபாருக் மாமா மற்றும் இணைச் செயலாளர் செல்ல வாப்பா மற்றும் அன்சாரி முஜுப் ரகுமான் செயற்குழு உறுப்பினர்கள் காதர் சுலைமான் பகுருதீன் (இமாம்) ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் செயற்குழு உறுப்பினர் சுல்தான் சிக்கந்தர் நன்றி கூறினார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்