கீழக்கரை ஆக, 24
SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த அழகன்குளம் பகுதி நாடார்வலசையில் மது கடை அகற்றக்கோரி இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
காலை 10 மணி முதல் ஆரம்பம் செய்த நிலையில் கிட்டத்தட்ட உயர் அதிகாரிகளுடன் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்களின் பேச்சுக்கு உட்பட்டு வரக்கூடிய வியாழக்கிழமை அன்று தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.
2 மாதத்தில் மது கடையை அகற்றி விடுவோம் என்பதை எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமாக நிறைவேற்றி தருவதாக வாக்களித்த பின்பு பெண்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM ) மாநில செயற்குழு உறுப்பினர் உம்முல் தௌலத்தியா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு தலைவி பாலேஸ்வரி மற்றும் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், மாவட்ட பொதுச் செயலாளர் சித்தி நிஷா மாவட்ட துணை தலைவி முபினா மற்றும் நகர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மேலும் இப்போராட்டத்தில் 250 பெண்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்