Spread the love

சென்னை ஆக, 17

நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு இன்று காலை 6:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என ஐ எம் ஏ கூறியுள்ளது. அவசரகால சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் நோயாளிகளுக்கு பாதிப்பின்றி மருத்துவர்கள் போராடுமாறு தமிழக மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *