சென்னை ஆக, 17
3 தென் மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், கோவை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவையில் நாளையும் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.