சென்னை ஆக, 9
பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆகஸ்ட் 9-ம் தேதி சர்வதேச பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது. வளங்களுக்காக காடு, மலைகளில் வாழ்ந்து வருகின்ற அம்மக்கள் அங்கிருந்து விரட்டப்படுவது பல நாடுகளில் இன்றும் தொடர்கிறது. பூமியின் தொல்குடிகளில் நிலம், மொழி உரிமைகளை உறுதி செய்யவும் கல்வி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.