சென்னை ஆக, 9
மத்திய அரசு கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசியை அறிமுகப்படுத்தியது. இந்த அரிசி 5 கிலோ, 10 கிலோ பைகளில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பாரதரிசி தமிழகத்தில் எங்கு கிடைக்கும் என்பது மக்களுக்கு தெரியவில்லை. இதனால் அதை எப்படி வாங்குவது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் பாரத் அரிசி கிடைக்கும் இடம் குறித்த அறிவிப்பை வெளியிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.