சென்னை ஜூலை, 27
தமிழக முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரங்களை சமர்ப்பிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆசிரியர்கள் இதர பணிகளை செய்பவர்களின் விபரங்களை ஆகஸ்ட் 31-க்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கிறதா என்பதை சரி பார்க்கவே தகவல்கள் கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.