ஆந்திரா ஜூலை, 26
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார் உடன் ஒப்பிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி உள்ளார. அம்பானி போல் பணம் சம்பாதிக்க ஜெகன் இப்படி செய்ததாகவும், ஜெகனின் ஆட்சியில் ஆந்திரா கஞ்சாவின் தலைநகரமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் YSRCP ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தான் இதற்கு முன் பார்த்ததில்லை என விமர்சித்துள்ளார்.