மதுரை ஜூலை, 25
விமான போக்குவரத்து துறை அமைச்சரை தென் தமிழக அமைச்சர்கள் வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வர்த்தக உறவை மேம்படுத்த மதுரையிலிருந்து துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூருக்கு விமான சேவை அதிகரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.