தேனி ஜூலை, 24
அமமுக மாவட்ட செயலாளர்கள் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தேனியில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடர்பாக இந்த கூட்டத்தில் தினகரன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.