எத்தியோப்பியா ஜூலை, 24
எத்தியோப்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக கோபா பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் மக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பலர் இடுபாடுகளுக்குள் சிக்கி உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.