பாரீஸ் ஜூலை, 21
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33-வது பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா வரும் 26 ம் தேதி தொடங்க உள்ளது. 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரம்மாண்டமாக தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. 26 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்க உள்ளனர். 162 படகுகள் மூலம் வீரர்களை நதிக்கு அழைத்து வந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பாதையில் இவ்விழா நடக்க உள்ளது.