சென்னை ஜூலை, 22
கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆறு மாதமாக நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பணிகளை விரைவாக முடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார். மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிப்பதாக அவர் உறுதியளித்ததாக கூறினார்.