கீழக்கரை ஜூலை, 22
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கீழக்கரையில் பழம்பெருமையான SBI வங்கியின் கிளை பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த வங்கியின் பணம் எடுக்கும்(ATM)இயந்திரம் பழுதடைந்து செயல்படாமல் இருந்ததால் அந்த அறையை வங்கி நிர்வாகம் இழுத்து மூடிவிட்டது.
அவசரத்துக்கு பணம் எடுக்க முடியாமல் வங்கியின் வாடிக்கையாளர்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.டிஜிட்டல் இந்தியாவில் கீழக்கரையில் ATM இயந்திரம் செயல்படாமல் இருப்பது வேதனையான விசயம் தான்.வங்கி நிர்வாகம் எப்போது சரி செய்யுமோ?
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்