கர்நாடகா ஜூலை, 21
கர்நாடகாவில் ஒரு குழந்தை 25 விரல்களுடன் பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. கொன்னூரை சேர்ந்த பாரதி என்பவர் சமீபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அங்கு குழந்தையின் ஒரு கையில் ஏழு விரல்களும் மற்றொரு கையில் ஆறு விரல்களும் இரு கால்களிலும் தலா ஆறு விரல்களும் இருந்துள்ளன. எனினும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.