ராமநாதபுரம் ஜூலை, 21
ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வங்கி கடன் உதவியுடன் ரூபாய் ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் வேளாண்மை துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.