மதுரை ஜூலை, 21
மக்களவைத் தேர்தலில் மதுரையில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு செல்லூர் ராஜாவே காரணம் என இபிஎஸ் இடம் எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி ராமசுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து செல்லூர் ராஜுவை இபிஎஸ் கடித்துக்கொண்டதாகவும், இதனால் கோபம் அடைந்த அவர் ராமசுப்பிரமணியனை தொலைபேசியில் ஆபாசமாக திட்டியதாகவும் கூறி ஆடியோ வெளியாகியுள்ளது. இது குறித்த கேள்விக்கு விசாரித்து பதில் அளிப்பதாக ராஜு கூறியுள்ளார்.