புதுடெல்லி ஜூலை, 19
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டும், அதனை கர்நாடக அரசு ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.