சென்னை ஜூலை, 17
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் ரவுடி திருவேங்கடம் எண்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த கொலையில் அரசியல் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தை இது உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியம் எனவும் கூறியுள்ளார்.