சென்னை ஜூலை, 13
சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மட்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேற்கு திசை காட்டிலும் வேக மாறுபாடு காரணமாக அண்ணா சாலை, சேப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, கோயம்பேடு, அம்பத்தூர், மாதவரம், பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் பல தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.