சென்னை ஜூலை, 13
துணை ஆட்சியர்கள், உதவி ஆணையர்கள், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி பகல் 12:30 மணிவரை தேர்வு நடக்கிறது. சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 797 தேர்வு அறைகளில் தேர்வு நடக்க உள்ளது. சென்னையில் மட்டும்ம் 124 அறைகளில் தேர்வு எழுத இருக்கின்றனர். இந்த பணியிடங்களுக்கு 2,38,247 பேர் போட்டி போடுகின்றனர்.