சென்னை ஜூலை, 11
திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, டி நகர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.