மேற்கு வங்கம் ஜூலை, 13
மத்தியில் ஸ்தரமற்ற நிலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என் டி ஏ கூட்டணி அரசு நீண்ட காலம் நிலைக்காது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நாட்டின் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக கூறினார். அத்துடன் மோடியின் ஆட்சி குறித்து மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.