கேரளா ஜூலை, 10
ஆடி மாத பூஜையை முன்னிட்டு வருகிற 15ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 16ம் தேதி இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும் எனவும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் ஆடி ஒன்று ஜூலை 16ல் வருவதால் ஆன்லைன் முன்பதிவில் தேதி மாற்றத்தை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.