நெல்லை ஆக, 29
நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாரதியஜனதா சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க ரூ.68.21 லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது. சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது என கூறினார்.
மேலும் பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும். அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும் என அவர் கூறினார்.