சென்னை ஜூலை, 1
அரசு பள்ளிகளில் உள்ள அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து எமிஸ் தளத்தில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளை கணக்கெடுக்கும் போது அதை தலைமை ஆசிரியர்கள் சரியாக வழங்குவதில்லை. இதனால் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இந்த சிக்கலை தவிர்க்க எமிஸ் தளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது அதன் வழியே அரசிடம் தேவையான நிதி கூறப்படும்.