சென்னை ஜூலை, 1
கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு நடைபெற்ற நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடந்தது. இதில் 813 மாணவர்கள் கலந்து கொண்டனர். 750 மாணவர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மறுதேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. www.exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.