சென்னை ஜூன், 29
மாணவர்களின் நலம் கருதி நீட் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற கோரி அந்தந்த முதலமைச்சர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.