சென்னை ஜூன், 25
கள்ளச்சாராயம் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அம்பேத்கர், புத்தர், வள்ளுவனின் வாரிசுகள் ஆகிய நாங்கள் தொலைநோக்கு பார்வையோடு மதுவிலக்கு கோரிக்கையை முன் வைக்கிறோம் என்றார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக போராட்டத்தை நடத்துவதாக கூறியுள்ளார்.