சென்னை ஜூன், 23
டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ பணியர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில் 2327 பணிகளில் 446 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்க முடிவை டிஎன்பிஎஸ்சி உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.