ரஷ்யா ஜூன், 20
ரஷ்யாவும் வடகொரியாவும் இணைந்து பரஸ்பர ராணுவம் மற்றும் தளவாட உதவி வழங்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளின் மேலாதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு உதவி உள்ளிட்டவற்றை இரு தரப்பும் செய்து கொள்ள இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா துணை நிற்பது குறிப்பிடத்தக்கது.