சென்னை ஜூன், 19
தமிழக பாஜகவின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. படுதோல்வி அடைந்த தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும், ஆலோசனை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.