சென்னை ஜூன், 19
நீட் தேர்வு என்பது வணிக வியாபாரம் ஆகிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை விமர்சித்துள்ளார். பணம் செலவு செய்து பயிற்சி மையத்தில் சேர முடியாத பல மாணவர்களின் கல்வி பெரும் வாய்ப்பை நீட் தேர்வு பறிக்கிறது என கூறிய அவர், சமூக நீதியை காக்க நீர் ஒழியும் வரை போராடுவோம் என்றார். நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார்.