சென்னை ஜூன், 15
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.