தென்னாப்பிரிக்கா ஜூன், 16
டி20 உலக கோப்பை தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் அதிக முறை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற இந்திய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. முன்னதாக 2009 ம் ஆண்டில் நடந்த டி20 தொடரில் நியூஸிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.