விக்ரவாண்டி ஜூன், 12
விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019, 2021ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக ஏழுமுறையும், அதிமுக ஆறுமுறையும் வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இத்தொகுதியில் தனி செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.