சென்னை ஜூன், 11
தனது சினிமா வாழ்க்கையில் இந்தியன் 2 படம் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் என ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த கதாபாத்திரங்களை விட இதில் சிறப்பாக நடித்ததாக தெரிவித்த அவர், தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக இந்த படத்தில் வருவதாக கூறியுள்ளார். இந்தியன் 2 படத்திற்காக பயணம் செய்த நாட்கள் மற்றும் நடித்த அனுபவங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.