புதுடெல்லி ஜூன், 10
பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள் ஐந்து தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் என மொத்தம் 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.