சென்னை ஆக, 28
சென்னை அண்ணாநகர் கம்பர் காலணியில் மாணவர்கள் தங்கிய வீட்டில் இருந்து 8 செல்போன்கள் ஒரு லேப்டாப் திருடப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுக்காக இரண்டு அறைகளில் தங்கி எட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். புழுக்கமாக இருந்ததால் வீட்டின் கதவை திறந்து வைத்து மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் மாணவர்களிடமிருந்து செல்போன், லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.