Spread the love

சென்னை ஆக, 29

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.

குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று தெரிகிறது. பரந்தூரில் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தொடர்பக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், அவர்களுக்கு இழப்பீடு மற்றும் மேலும் சில சலுகைகள் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *