கரூர் ஆக, 28
அரவக்குறிச்சி அருகே கணக்குப்பிள்ளை புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பள்ளியின் சமையல் அறை அருகே இருந்த மரம் ஒன்று சாய்ந்து சமையல் அறையின் மீது விழுந்தது. இதனால் சமையல் அறையின் மேற்கூரை சேதமடைந்தது. நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.