கரூர் ஆகஸ்ட், 23
புலியூர் பேரூராட்சியில் தலைவரை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு பேரூராட்சியின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ள திமுக அரசை கண்டித்தும், புலியூர் பேரூராட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தியும் நேற்று புலியூர் நால்ரோடு அருகே மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தாந்தோணி ஒன்றிய தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். புலியூர் பேரூராட்சி கவுன்சிலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசினார். இதில், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.