ஆந்திரா ஜூன், 4
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் என அவரிடம் சந்திரபாபு உறுதி தெரிவித்ததாக கட்சியின் செய்தி தொடர்பாளர் கிரிஷ்மா தெரிவித்தார். முன்னதாக காங்கிரஸ் சந்திரபாபுவுக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.