மகாராஷ்டிரா ஜூன், 3
INDIA கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ், தேஜஸ்வி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இரண்டு மாதத்திற்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டது என விமர்சித்த அவர், அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றார். மேலும் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிபிஎம் தலையிடாத வரை அந்த அரசில் நாங்கள் பங்கேற்க எந்த தடையும் இருக்காது என அவர் தெரிவித்தார்.