வாரணாசி ஜூன், 1
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதியில் 2014 ம் ஆண்டு 2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மோடி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் ஹார்ட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் போட்டியிடுகிறார்.