கன்னியாகுமரி மே, 31
விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார் மூன்று நாட்கள் பயணமாக நேற்று மாலை குமரி வந்துள்ளார். தனது 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற அவர் இரவு 7 முதல் 7:30 வரை தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அறைக்கு திரும்பிய அவர் இன்று காலை முதல் மீண்டும் தியானத்தை தொடங்குகிறார்.