காஞ்சிபுரம் ஆக, 28
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்ட டெலிகோபால்ட் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார் காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் ஸ்ரீநிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.