புது டெல்லி மே, 29
ஜிபே, போன் பேவுக்கு போட்டியாக யுபிஐ சேவையில் அதானி நிறுவனம் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் யுபிஐ பேமென்ட் முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜிபே,போன் பே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் யூபிஐ சேவையில் களமிறங்க முடிவு செய்துள்ள அதானி நிறுவனம், அது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.