சென்னை மே, 27
10 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட ஆதார் அட்டை புதுப்பிக்கப்படாவிட்டால் ஜூன் 14க்கு பிறகு செல்லாது என வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என யூஐடிஏஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தில் ஆதாரத்தை புதுப்பிக்காவிட்டாலும் அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையில் ஆதார் விபரங்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.