புதுடெல்லி மே, 23
டெல்லி நார்த் பிளாக் பகுதியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. தகவலின் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 1-ம் தேதி 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்து ஹங்கேரியில் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. அதனுடன் இதற்கு தொடர்புண்டா என விசாரணை நடக்கிறது.